Thursday, September 20, 2012
Thursday, August 30, 2012
ரசனை
நேற்றைய இரவு இளையராஜாவின் "காதலுக்கு கண்கள் இல்லை மானே " என்ற பாடலில் தொடங்கி சின்னதம்பியில் வரும் தூயிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே " யில் முடிந்தது. நாளெல்லாம் பிஸியோ பிஸி என்று ஓடிக்கொண்டிருந்தேன். இரவு எட்டு மணிக்குமேல்தான் என் பாட்டு உலகம் ஆரம்பமானது.பாட்டும் டான்ஸ்சும் அறையே கலகலப்பு
Tuesday, August 28, 2012
பகுதி-2
வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ள நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து,சொந்த நிலங்களிலே அகதிகளாய் அடிமைகளாய் ஆக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வை, மலைக்காடுகளின் சீரழிவை,வரலாற்று ஆய்வாக அக்கறையோடு ஆவணப்படுத்திய தோழர்கள் இரா.முருகவேள்,"ஒடியன்" இலட்சுமணன் அவர்களையும் கோவன் வெளியீட்டகத்தையும் வாயார மனதார பாரட்டுவோம்.
முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டுதான் இதை எழுத ஆரம்பிக்க வேண்டும்.கிட்டத்தட்ட இந்தக் குறுந்தகடு கையில் கொடுக்கப்பட்டு,படத்தை பார்த்த பிறகும் எழுத நினைத்து,இன்று, நாளை என எழுத ஆரம்பிப்பதற்குள் நாட்கள் பத்தை கடந்துவிட்டது.அப்படியொரு முக்கியப் பணிகளில்(?!) மூழ்கிப் போனேன் நான்.இன்று எப்படியாவது எழுதியாக வேண்டும் என கணிணியில் மீண்டும் படத்தை ஓடவிட்டேன் .பல்வேறு புல்லினங்களின் கீச்சல்களோடு நாளி ஆவணப்படம் துவங்க ஆரம்பிக்கிறது.
"தென்னிந்தியாவின் முதுகெலும்பாய் இருப்பவை மேற்குத் தொடர்ச்சி மலைகள்" என இலட்சுமணன் அவர்களின் குரல், மலைமுகடுகளில் தழுவிக் கொண்டிருக்கும் சாரலாய் நம்மை அணைத்து மலைப்பயணத்திற்கு அழைத்து செல்கிறது.பல்லாயிரம் ஆண்டுகளாய் இந்த மலைகளில் அடிமைத்தனத்தையும்,ஆணாதிக்கத்தையும்,பேராசை,நிலவுடைமை முறையை அறிந்திராத பல்வேறு இன பழங்குடிகள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.அம்மக்கள் "தேவைக்கு மட்டுமே விவசாயம்,தேவைக்கு மட்டுமே வேட்டை"என காட்டை செழிப்போடு வைத்திருந்தனர்.அந்த மலைக்காடுகளில் வாழும் பல்வேறு உயிரினங்களான மான்கள்,மீன்கள்,யானைகள்,பறவையினங்களைப் போலவே அங்கு வாழும் பழங்குடி மக்களையும் காடுகளிலிருந்து தனித்து பிரித்துவிட முடியாத அளவிற்கு காடுகளோடு ஒன்றிப் போனது அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு,கலாச்சாரம் என்று ஆணித்தரமாக எடுத்துவைக்கிறது நாளி.
பின்பு வந்த சமவெளி செல்வந்தர்களால்,அரசுகளால்,வெள்ளைக்காரர்களால் காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக களவாடப் பட்டதை கலக்கத்தோடு பதிவு செய்கிறது நாளி. கருப்பு தங்கம் என அழைக்கப்பட்ட மிளகும் தந்தமும் அம்மக்களின் சுதந்திர வாழ்வை சுவைக்க ஆரம்பிக்கிறது.அதற்கு அந்த அரசுகள் கையாண்ட வழிமுறைகள் தான் சைவமும்,சமணமுமான மதங்கள்.
சமவெளி மனிதர்கள் பழங்குடி மக்களைப் போன்று காடுகளை த் தாயாக, தெய்வமாக பார்க்கவில்லை பணம் கொழிக்கும் புதையலாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
முடிவாக சொல்வதற்கும் ஒன்று இருக்கிறது ,
காடு பழங்குடி மக்களின் இரத்தமும் சதையும்
அதற்குதான்
இரத்தமும் சதையும் சிந்தி போராடுக்கின்றனர்.
படங்களுக்கு நன்றி: ஈரோடு கதிர்

Monday, July 2, 2012
"சொற்கள் சும்மாயிருப்பதில்லை
அவை விசையூக்கம் கொண்டவை"
-அழகியபெரியவன்.
நான் என்னவாக வேண்டும் இந்தக் கேள்வி "ஐந்தாம்வகுப்பு மாணவனான என்னிடம் கேட்கப்பட்டது.என்னுடைய பதிலோ நான் வக்கீலாவேன் என்றேன்.அந்த வயதில் எனக்கு வக்கீலாகும் ஆசையிருந்தது.அடுத்து நான் ஓவியன் ஆக ஆசைப்பட்டேன் வண்ணங்களின் மேல் ஆசையை கூட்டியது என் எட்டாம் வகுப்பு.(பிள்ளையாரை வரைந்து வீட்டில் பிரேம் போட்டுவைத்தது இன்னும் ஞாபகமிருக்கிறது.)பிறகு பக்கத்து வீட்டு அண்ணன் சென்னையில் சினிமா இயக்குனர் ஆக பெரும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.அவரிடம் பழகும் வாய்ப்பால் கவிதை எழுத கற்றுக் கொண்டேன்.இப்படி வளர வளர என் ஆசையின் பட்டியலும் வளர்ந்துக் கொண்டிருந்தது.குடுமபத்தின் வறுமை காரணமாக என்னை கல்லூரியில் சேர்க்கமாட்டேன் என்றார் அப்பா.நான் அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தேன்.என் கல்லூரி வாழ்க்கை மிகவும்கொடுமையானதாகஇருந்தது.உணவு ,உடை,உறைவிடம் இம்மூன்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.ஆனால் நான் மனிதனாக மதிக்கபடவில்லை.
Wednesday, June 27, 2012
மண்டோவுடன் என் காதல் :
எனக்கு படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.அதிலும் என்னை கவர்ந்து விட்ட கதைகளையும் கவிதைகளையும் திரும்ப திரும்ப வாசிக்கும் பழக்கம் என்னிடம் இருந்து வருகிறது.அப்படிதான் அன்றைய மாலை நேரம்,மண்டோவின் சிறுகதைகளை படித்துக் கொண்டிருந்தேன்.இதுவரை பத்து பதினைந்து முறைக்கு மேல் படித்திருக்கிறேன்.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ,தேனுண்ட தேனீக்கள் போல அவரின் எழுத்துகளில் மூழ்கி கிடக்கிறேன். இச்சமூகத்தால் தள்ளிவைக்கப்பட்ட,இழிவுக்குள்ளாகப்பட்ட விலைமாதர்களின் வாழ்க்கை,அதில் எழும் மனச்சிக்கல்,கோபங்கள்,கொண்டாட்டங்கள் என சகலத்தையும் மண்டோ பதிவு செய்து வைத்திருக்கிறான் .மேலும் மதம் எனும் மதயானை மனிதர்களிடையே புகுந்துகொண்டு மனிதத்தை துவம்சம் செய்வதையும்,ஒவ்வொரு கலவரங்கள் மூளும் போதும் சூரையாடப்படுவது கடைகள் மட்டுமல்ல பெண்களின் உடைகளும் தான் என்பதையும் மிகத்தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறான்.
000
Tuesday, May 8, 2012
Thursday, April 12, 2012
Tuesday, February 21, 2012
அம்மா எப்ப வரும்
1
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த வீட்டில் குன்னன் அம்மாவின் பழஞ்சேலையில் சுருண்டு கிடந்தான்.அவன் அம்மாவும் அக்காவும் ஆளுக்கொருப் பக்கமாய் பழைய வேட்டி சேலையை போர்வையாக்கி தங்கள்
Sunday, February 19, 2012
Thursday, February 16, 2012
Tuesday, January 31, 2012
கூடங்குளம் அணு உலை-அழிவின் விளிம்பில் மக்கள்
என்னுடைய பிளாக்கின் template design யை மாத்தி மாத்தி என் கண்ணும் கையும் ஓய்ந்து போனது.சரி ஏதாவது ஒன்று இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.ஆனால் பாருங்கள் google blog ன் domain யை மாற்றி விட்டது (.com லிருந்து .in க்கு).அதனால் என் பிளாக் ஓபன் ஆவதற்கே நீண்ட நேரம் ஆனது அதுமில்லாமல் ஓட்டு மதிப்பும் போய்விட்டது வேறு வழியில்லை என்று இப்படிமாற்றிவிட்டேன்.நல்லாயிருக்கா என்று நீங்களே சொல்லுங்கள்.
சரி நம்ம விசயத்துக்கு வருவோம்,
கூடங்குளத்தில் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் என்று ஒரு இணையதளத்தில் பிளாஸ் நியூஸ் போட்டிருக்கிறது.அணு உலை ஆபத்தானது என்று சொல்வது பொய் பிரச்சாரம் என்று மத்திய நிபுணர் குழு தலைவரும்,அணு உலை பாதுகாப்பானதுன்னு நம்ம அணு விஞ்ஞானியாமே டாக்ருடரு அப்துல் கலாம் வரைக்கும் சொல்லாரங்க .கூடங்குளம் மக்களும்,சுற்றுசூழல் அமைப்பினரும் ,அறிவுஜீவிகளும்,எழுத்தாள பெருமக்களும் இதனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.எல்லோருக்கும் மின்சாரம் வேண்டும்தான் ஆனால் இந்த அணு உலை விசயத்தில் வளர்ந்த நாடுகள் கூட ஒதுக்கி வேண்டாம் என்று சொல்வதின் காரணம் அதன் பயன்பாட்டை விட அழிவுதான் அதிகம் என்பதினால்தான் .
Facebook கில் நண்பர் அருள் எழிலன் வெளியிட்டுள்ள அறிவிப்பை இங்கு பதிப்பிக்கிறேன்
ஆதரியுங்கள் நண்பர்களே!
விழாவிற்கு நான் போகிறேன்..
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
விழாவிற்கு போய் வந்தவுடன் மீதியை பதிப்பிக்கிறேன்
அன்புடன்
அறிவழகன்
Monday, January 30, 2012
Saturday, January 28, 2012
டிசம்பர் மாதக் குளிரில் தெப்பலாக நனைந்து மருத்துவமனையின் கட்டிடம் நின்றுக் கொண்டிருந்தது.மருத்துவனை முற்றத்தில் இரண்டு பெரிய தூண்கள் வெள்ளையடிக்கப் பட்டிருந்தது.அது பார்ப்பதற்கு ஒரு பெரிய ராட்சசன் முட்டித் தெரிய தன் வேட்டியைத் தூக்கி கட்டிக்கொண்டு நிற்பது போலிருந்தது.கிழக்கில் கதிரவன் தன் முகம் முழுக்க இளமஞ்ச சிவப்பை பூசிக் கொண்டு வந்தான்.நேரம் போக போக இளஞ்சிவப்பிலிருந்து வெள்ளி நிறத்துக்கு தன்னைமாற்றிக் கொண்டான்.
காலை 6 மணி,
வழக்கத்துக்கு மாறாக விழிப்பு வந்துவிட்டது.படுக்கையிலிருந்து எழுந்து மணி பார்த்தேன் 5.45 .நானிருப்பது மருத்துவமனையின் முதல் தளத்திலுள்ள அறை எண் 105-ல்.டீக் குடித்துவிட்டு வரலாமென கேண்டீன் போய்ப் பார்த்தேன் .பால் இன்னும் வரல கொஞ்சம் நேரமாகும் என்றார்கள்.சரியென அப்படியே மருத்துவமனைக்கு முன்னாலிருந்த டீக்கடை வந்து ஒரு டீயைக் குடித்துவிட்டு செக்கூரிட்டி அலுவலகத்தில் பேப்பர் படித்துக் கொண்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ரெண்டு பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையைச்சுற்றி கூட்டிக் கொண்டிருந்தனர்.மூவர் உள்ளே சுத்தம் செய்து துடைத்துக் கொண்டிருந்தனர்.எமர்சன்ஷி வார்டில் நோயாளிகள் இருமிக் கொண்டும்
Wednesday, January 25, 2012
கோடிட்ட இடங்களை நிரப்புதல்-புத்தகத்தைப் பற்றி சில குறிப்புகள்
"அப்பாவோடதான் வாழ ஆசை" எனப் பெரியமனுசி போல்
சொல்லும் எங்கள் சின்ன மகள் "புப்பு" என்கிற
ஸ்ரீசங்கரகோமதிக்கு...
என்றுதான் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகத்தின் பக்கங்கள். ஒவ்வொரு பக்கங்களை புரட்டும் போதும் நமக்குள் கிடக்கும் பால்யம் தன்னைப்புரட்டிப் பார்த்துக்கொள்கிறது.உலகத்தின் ஓட்டத்தோடு என்னைப் பொருத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தவனை எதுவோயொன்று தடுத்து நிறுத்தியதைப் போல இருக்கிறது இந்தத் தொகுப்பிலுள்ள கவிவரிகள்.படிக்க படிக்க என் பால்யத்தை கண்முன் நிறுத்தி ஒப்பனை செய்துப் பார்க்கிறது என் மனம்.இழந்தயொன்று இன்று கைக்குள் சிக்கியதாய் கொண்டாட்டம் கொள்கிறது என் பால்யம்.
_______________________________
குழந்தைகள் உலகம் போலி ஒப்பனையில்லாதது.அதனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் நிறையவே விசயங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்த கவிதைகளே போதுமானது,
கசடற
தன் பிரிய உலகத்தில்
கடந்து போகும்
பூனை,நாய்,மாடு,ஆடு,கோழி
அனைத்தையும் குட்டி குட்டா
என்று அழைப்பதோடு
வீட்டில்
அம்மா குட்டி,அப்பா குட்டா
எனவும் சமயத்தில்
அழைக்கிறாள்.
குட்டி என்றால் பெண்பாலையும்
குட்டா என்றால் ஆண்பாலையும்
குறிப்பதென்று
யாரிடம் எப்பொழுது கற்றாள்
என்று தெரியவில்லை.
ஆனால்
பிரியத்திற்கு
உயர்திணை,அஃறிணை
பாகுபாடு இல்லை
எனக் கற்றுக் கொடுக்கிறாள்
தமிழ் ஆசிரியை ஆன எனக்கு.
தொலைத்த தேடல்
இருவருடங்களுக்கு முன்னம்
கோடை விடுமுறையில்
ஊருக்கு வந்திருந்த
அத்தைப் பையன் "ஸ்ரீஜித்"துடன்
வ.உ.சி மைதானத்தில் குதிரைச் சவாரி
போனபோது தொலைத்த சிவப்புச் செருப்பை,
நேற்றைக்குப் போன போதும்
தேடச் சொல்லி அழுகிறாள் "புப்பு"
கடைசியாக ஒன்றே ஒன்று, தொலைத்த தேடல் என்ற கவிதையில் முன்னர் தொலைத்ததை தேடச்சொல்லி அழுவதைப் பார்க்கையில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் "புப்பும்" முன்னர் தொலைத்த எதையாவது தேடச்சொல்லி அழுதால்தான் என்ன என்று நினைக்கவைக்கிறது.
பின்குறிப்பு: அன்புள்ள சுமதி ராம் அவர்களே, அச்சு அசலான குழந்தைகள் உலகத்தை படம்பிடித்ததில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள். தொடருங்கள்...
அன்புடன்
அறிவழகன்
புத்தகம் கிடைக்குமிடம் :
கோடிட்ட இடங்களை நிரப்புதல்
சுமதி ராம்
வெளியீடு: வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்
திருவண்ணாமலை
பேசி: 9444867023
விலை ரூ.50/-
சுமதி ராம்
வெளியீடு: வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்
திருவண்ணாமலை
பேசி: 9444867023
விலை ரூ.50/-
Wednesday, January 4, 2012
பகல் உறக்கம்:
உறங்க செல்லபோகும் நேரம்
இரவு பன்னிரண்டு மணி
படுக்கையில் சாய்ந்து
இரவை கண்மூடி
கனவை திறக்கிறேன்
பகலாய்
என் பகல்பொழுது
வெண்ணிலவையும்
நட்சத்திரங்களையும் கொண்டது
Monday, January 2, 2012
எல்லோருக்குமாக ஒரு சொல்
ஒரு கண்ணாடியைப் போலதான் என்வாழ்க்கை.நடப்பவை எதற்கும் காரணகாரியங்கள் எதுவும் என் கைகளில் இல்லை.என் முன்னே சிலநேரம் தேவதைகளும் தன்முகம் காட்டி போகிறது.சிலநேரம் கொடிய பேய்களும் தன் அகோரபற்கள் வெளித்தெரிய என்னிடம் வருகிறார்கள்.எதையும் நான் வெறுப்பதில்லை.
ஒரு குடிகாரனைப் பார்ப்பதுபோல எல்லோரும் என்னை முகம்சுளிக்கிறார்கள்.என் இயல்புகளிலிருந்து என்னால் வெளியேறி வரமுடிவதில்லை.இந்த சமூகம் என்னை ஒரு கருங்கல்லை போல கெட்டிப்படுத்தி வைக்கவே ஆசைபடுகிறது.ஒரு பறவையின் சிறகாய் வாழத்துடிக்கும் என்மனவெளியை சூறாவளி சொற்கள் கொண்டு அலைகழிக்க ஆசைபடுவதேன்.
கடேசிகடைசியாய் எல்லோருக்குமாக ஒரு சொல்
“ உங்கள் பாவங்களை சுமக்கும்
ஒரு தேவதை என்னிடம் இருக்கிறாள்
உங்கள் வேதனை மிகுந்த காயங்கள் ஆற்ற
ஒரு அற்புதம் என்னிடம் இருக்கிறது
அது அன்பு
அன்பு மட்டுமே
அன்பைத் தவிர வேறோன்றுமில்லை.
Subscribe to:
Comments (Atom)