நீண்ட கவிதைக்குப் பின் ஒருவரி




கைகோர்த்து
வெகுதூரம் நடந்தோம்
நம்மிருவரிடையே
நடைபழகியது காதல்.






நாளை சந்திப்பு
பூங்காவில் வேண்டாம்
கண்டுபிடிக்க
கடினமாக இருக்கிறது
பூக்களோடு கலந்துவிட்ட
உன்னை.


சந்தைகள்
நிறைந்த
உன் தெருவில்
சங்கீதம் கேட்கிறேன் நான்.




                           -தொடரும்.





Comments