Friday, May 31, 2013

சொந்த கதை சோக கதை............





வாழ்க்கை முழுக்க பரிதவிப்பையும் பரிதாபத்தையும் சுமந்து திரிவது என்றால் என்னமாதிரியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என தனக்குள் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.இப்போது கூட பாருங்கள் பீத்தோவனின் சிம்பொனியை கேட்டுக் கொண்டுதான் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கு வாய்த்த வாழ்க்கை அவ்வளவுதான் போல.


Thursday, September 20, 2012

Thursday, August 30, 2012

ரசனை

நேற்றைய  இரவு இளையராஜாவின் "காதலுக்கு கண்கள் இல்லை மானே " என்ற பாடலில் தொடங்கி சின்னதம்பியில் வரும் தூயிலே  ஆடவந்த வானத்து மின்விளக்கே " யில் முடிந்தது. நாளெல்லாம் பிஸியோ பிஸி என்று ஓடிக்கொண்டிருந்தேன்.  இரவு எட்டு மணிக்குமேல்தான் என் பாட்டு உலகம் ஆரம்பமானது.பாட்டும் டான்ஸ்சும் அறையே கலகலப்பு

Tuesday, August 28, 2012

பகுதி-2

வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ள நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து,சொந்த நிலங்களிலே அகதிகளாய் அடிமைகளாய் ஆக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வை, மலைக்காடுகளின் சீரழிவை,வரலாற்று ஆய்வாக அக்கறையோடு ஆவணப்படுத்திய தோழர்கள் இரா.முருகவேள்,"ஒடியன்" இலட்சுமணன் அவர்களையும் கோவன் வெளியீட்டகத்தையும் வாயார மனதார பாரட்டுவோம்.


முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டுதான் இதை எழுத ஆரம்பிக்க வேண்டும்.கிட்டத்தட்ட இந்தக் குறுந்தகடு கையில் கொடுக்கப்பட்டு,படத்தை பார்த்த பிறகும் எழுத நினைத்து,இன்று, நாளை என எழுத ஆரம்பிப்பதற்குள் நாட்கள் பத்தை கடந்துவிட்டது.அப்படியொரு முக்கியப் பணிகளில்(?!) மூழ்கிப் போனேன் நான்.இன்று எப்படியாவது எழுதியாக வேண்டும் என கணிணியில் மீண்டும் படத்தை ஓடவிட்டேன் .பல்வேறு புல்லினங்களின் கீச்சல்களோடு நாளி ஆவணப்படம் துவங்க ஆரம்பிக்கிறது.


"தென்னிந்தியாவின் முதுகெலும்பாய் இருப்பவை மேற்குத் தொடர்ச்சி மலைகள்" என இலட்சுமணன் அவர்களின் குரல், மலைமுகடுகளில் தழுவிக் கொண்டிருக்கும் சாரலாய் நம்மை அணைத்து மலைப்பயணத்திற்கு அழைத்து செல்கிறது.பல்லாயிரம் ஆண்டுகளாய் இந்த மலைகளில் அடிமைத்தனத்தையும்,ஆணாதிக்கத்தையும்,பேராசை,நிலவுடைமை முறையை அறிந்திராத பல்வேறு இன பழங்குடிகள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.அம்மக்கள் "தேவைக்கு மட்டுமே விவசாயம்,தேவைக்கு மட்டுமே வேட்டை"என காட்டை செழிப்போடு வைத்திருந்தனர்.அந்த மலைக்காடுகளில் வாழும் பல்வேறு உயிரினங்களான மான்கள்,மீன்கள்,யானைகள்,பறவையினங்களைப் போலவே அங்கு வாழும் பழங்குடி மக்களையும் காடுகளிலிருந்து தனித்து பிரித்துவிட முடியாத அளவிற்கு காடுகளோடு ஒன்றிப் போனது அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு,கலாச்சாரம் என்று ஆணித்தரமாக எடுத்துவைக்கிறது நாளி.

பின்பு வந்த சமவெளி செல்வந்தர்களால்,அரசுகளால்,வெள்ளைக்காரர்களால் காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக களவாடப் பட்டதை கலக்கத்தோடு பதிவு செய்கிறது நாளி. கருப்பு தங்கம் என அழைக்கப்பட்ட மிளகும் தந்தமும் அம்மக்களின் சுதந்திர வாழ்வை சுவைக்க ஆரம்பிக்கிறது.அதற்கு அந்த அரசுகள்  கையாண்ட வழிமுறைகள் தான் சைவமும்,சமணமுமான மதங்கள்.

சமவெளி மனிதர்கள் பழங்குடி மக்களைப் போன்று காடுகளை த் தாயாக, தெய்வமாக பார்க்கவில்லை பணம் கொழிக்கும்   புதையலாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

முடிவாக சொல்வதற்கும் ஒன்று இருக்கிறது ,

காடு பழங்குடி மக்களின் இரத்தமும் சதையும்
அதற்குதான் 
இரத்தமும் சதையும் சிந்தி போராடுக்கின்றனர்.








படங்களுக்கு நன்றி: ஈரோடு கதிர்




Monday, July 2, 2012



               "சொற்கள் சும்மாயிருப்பதில்லை
                அவை விசையூக்கம் கொண்டவை"
                  
                                                 -அழகியபெரியவன்.



நான் என்னவாக வேண்டும் இந்தக் கேள்வி "ஐந்தாம்வகுப்பு மாணவனான என்னிடம் கேட்கப்பட்டது.என்னுடைய பதிலோ நான் வக்கீலாவேன் என்றேன்.அந்த வயதில் எனக்கு வக்கீலாகும் ஆசையிருந்தது.அடுத்து  நான் ஓவியன் ஆக ஆசைப்பட்டேன் வண்ணங்களின் மேல் ஆசையை கூட்டியது என் எட்டாம் வகுப்பு.(பிள்ளையாரை வரைந்து வீட்டில் பிரேம் போட்டுவைத்தது இன்னும் ஞாபகமிருக்கிறது.)பிறகு பக்கத்து வீட்டு அண்ணன் சென்னையில் சினிமா இயக்குனர் ஆக பெரும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.அவரிடம் பழகும் வாய்ப்பால் கவிதை எழுத கற்றுக் கொண்டேன்.இப்படி வளர வளர என் ஆசையின் பட்டியலும் வளர்ந்துக் கொண்டிருந்தது.குடுமபத்தின் வறுமை காரணமாக என்னை கல்லூரியில் சேர்க்கமாட்டேன் என்றார் அப்பா.நான் அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தேன்.என் கல்லூரி வாழ்க்கை மிகவும்கொடுமையானதாகஇருந்தது.உணவு ,உடை,உறைவிடம் இம்மூன்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.ஆனால் நான் மனிதனாக மதிக்கபடவில்லை.


Wednesday, June 27, 2012

மண்டோவுடன் என் காதல் :







எனக்கு படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.அதிலும் என்னை கவர்ந்து விட்ட கதைகளையும் கவிதைகளையும் திரும்ப திரும்ப வாசிக்கும் பழக்கம் என்னிடம் இருந்து வருகிறது.அப்படிதான் அன்றைய மாலை நேரம்,மண்டோவின் சிறுகதைகளை படித்துக் கொண்டிருந்தேன்.இதுவரை பத்து பதினைந்து முறைக்கு மேல் படித்திருக்கிறேன்.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ,தேனுண்ட தேனீக்கள் போல அவரின் எழுத்துகளில் மூழ்கி கிடக்கிறேன். இச்சமூகத்தால் தள்ளிவைக்கப்பட்ட,இழிவுக்குள்ளாகப்பட்ட விலைமாதர்களின் வாழ்க்கை,அதில் எழும் மனச்சிக்கல்,கோபங்கள்,கொண்டாட்டங்கள் என சகலத்தையும் மண்டோ பதிவு செய்து வைத்திருக்கிறான் .மேலும் மதம் எனும் மதயானை மனிதர்களிடையே புகுந்துகொண்டு மனிதத்தை துவம்சம் செய்வதையும்,ஒவ்வொரு கலவரங்கள் மூளும் போதும் சூரையாடப்படுவது கடைகள் மட்டுமல்ல பெண்களின் உடைகளும் தான் என்பதையும் மிகத்தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறான்.


                                                                                                  000


Tuesday, May 8, 2012

மிகச்சரியாக சொன்னால்....

யாரும் கதியற்ற ஒரு நிலைதான் இப்போது.நான் பிழைப்புக்காக ஆந்திராவில் ஒரு தனியார் மருத்துவமனையில் கணிப்பொறி  துறையில் இருக்கிறேன்.பொதுவாக