நானும் என் எழுத்தும்







இந்த பூமிப்பந்தில்
எல்லா உயிர்களையும் போலதான்
என் இருத்தலும் இயக்கமும்




மண் கிழித்து வரும்
ஒரு புல்லினை போலதான்
என் எழுத்தும்


இதில் அற்பம் எது
அற்புதம் எது
எல்லாம் ஒன்றுதான்


நான் யாராக இருக்கிறேன்
என்று பார்க்கிறது
இந்த உலகம்
நான் நானாகவே இருக்கிறேன்


உங்கள் அகராதியைக் கொண்டு
அளக்காதீர்கள்
ஏனென்றால் அது
என் வார்த்தைகள்.



Comments

Anonymous said…
அருமையான கவிதை...வாழ்த்துக்கள் நண்பரே...
arivazhagan said…
நன்றி நண்பரே