எனது ஆரம்ப கால
கனவில்
இரண்டு மலைகளும்
ஒரு பள்ளத்தாக்கும்
வரக் கண்டேன்.
பசுமையை உள்வாங்கி
பரந்து கிடந்தாள்
நிலமகள்.
வெள்ளை நிறத்தில்
அரங்கேற்றமானது
தேவதைகளின் மன்மத
நாட்டியம்.
எல்லாம் நாற்பது
வரையிலும்
அதீத கனவுகளில்
நாக்கு வெளித் தள்ளி
செத்து விழுந்தான்
கனவுக்கு வெளியே
தொடக்கத்திலிருந்தே
தொடர்ந்த வந்த
ஒரு கனவொன்று
அம்பையின் வடிவில்
அரங்கேற்றி விட்டு
வெளியேறி போனாள்
உடலைவிட்டு
Comments