கருத்தப் பெண்


ருத்துவமனை வாசலில்

இன்று காலை
கண்ணீரோடு
நின்றுக் கொண்டிருந்தாள்
கருத்தப் பெண்ணொருத்தி


காரணம் இதுதான்
கையில் திணிக்கப்பட்ட
கட்டணச் சீட்டிற்கு
காசின்றி கெஞ்சியபடி


அடிப்பட்டு கிடக்கும்
அப்பனுக்காய் அழுததைவிட
அறை கட்டணத்துக்காய்
அழுததை பார்க்கையில்
மனதில் மெதுவாய்
எதுவோ ஊர்ந்தது


என்ன செய்வதென்று
புரியாமல் குற்றயுணர்வில் நழுவி
மெல்ல மெல்ல
என் அறைக்கு திரும்பினேன்


என் கால்களுக்குக் கீழே
பிசுபிசுத்த கண்ணீர்
அவளுக்காகவும் இருக்கலாம்
அவளுடையதாகவும் இருக்கலாம்.



Comments