டிசம்பர் மாதக் குளிரில் தெப்பலாக நனைந்து மருத்துவமனையின் கட்டிடம் நின்றுக் கொண்டிருந்தது.மருத்துவனை முற்றத்தில் இரண்டு பெரிய தூண்கள் வெள்ளையடிக்கப் பட்டிருந்தது.அது பார்ப்பதற்கு ஒரு பெரிய ராட்சசன் முட்டித் தெரிய தன் வேட்டியைத் தூக்கி கட்டிக்கொண்டு   நிற்பது போலிருந்தது.கிழக்கில் கதிரவன் தன் முகம் முழுக்க இளமஞ்ச சிவப்பை பூசிக் கொண்டு வந்தான்.நேரம் போக போக இளஞ்சிவப்பிலிருந்து வெள்ளி நிறத்துக்கு தன்னைமாற்றிக் கொண்டான்.


காலை 6 மணி,


வழக்கத்துக்கு மாறாக விழிப்பு வந்துவிட்டது.படுக்கையிலிருந்து எழுந்து மணி பார்த்தேன் 5.45 .நானிருப்பது மருத்துவமனையின்  முதல் தளத்திலுள்ள அறை எண் 105-ல்.டீக் குடித்துவிட்டு வரலாமென கேண்டீன் போய்ப் பார்த்தேன் .பால் இன்னும் வரல கொஞ்சம் நேரமாகும் என்றார்கள்.சரியென அப்படியே மருத்துவமனைக்கு முன்னாலிருந்த டீக்கடை வந்து ஒரு டீயைக் குடித்துவிட்டு செக்கூரிட்டி அலுவலகத்தில் பேப்பர் படித்துக் கொண்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ரெண்டு பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையைச்சுற்றி கூட்டிக் கொண்டிருந்தனர்.மூவர் உள்ளே சுத்தம் செய்து துடைத்துக் கொண்டிருந்தனர்.எமர்சன்ஷி வார்டில் நோயாளிகள் இருமிக் கொண்டும் 

Comments