அடச்சே..!!!??? (அல்லது)கனவில் ஒருநாள்










என் நண்பனின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகத் தயாராகிறேன்.நீண்ட காத்திருப்பிற்குப்பின் பேருந்து வருகிறது.பேருந்தில் ஏறி இருக்கைக்கு வருகிறேன்.கண்டக்டர் வருகிறார் சீட்டைக் கிழித்து கொடுக்கிறார்.நான் மணிபர்சிலிருந்து நூறு ரூபாயை நீட்டுகிறேன்.இப்போது என் கவனமெல்லாம்
பேருந்தின் வாசலிலே இருக்கிறது.நீ புன்னகைத்தப் படியே வருகிறாய் மஞ்சள் நிற சுடிதாரில்.இன்னொரு டிக்கெட் என்கிறேன்.


பயணம் முழுக்க சிரிப்பும் பேச்சுமாக இருக்கிறது.பேருந்து நிற்கிறது நீ இறங்கி போகிறாய் ஒரு கையைத் தூக்கி அசைத்தப்படியே.புத்தக வெளியீட்டுக்கு என் அப்பா வருவதாய் சொன்னார்.காத்திருக்கிறேன் வாசலைப் பார்த்தபடியே.விழா முடிகையில் என் அப்பாவை மறந்து உன்னிடம் வந்து நிற்கிறது என் நினைவுகள்.ஊருக்கு கிளம்ப தயாராகிறேன் மீண்டும் உன்னோடு பேருந்து பயணத்தை நினைத்துக் கொண்டு.இப்போது பேருந்தில் இருக்கிறேன் . டிக்கெட்டுக்கு நூறு ரூபாயை நீட்டுகிறேன், கண்டக்டர் சீட்டை கிழித்துக் கொண்டிருந்தார், என் கவனமெல்லாம் பேருந்தின் வாசலிலே இருக்கிறது.நீ புன்னகைத்தப் படியே வருகிறாய் மஞ்சள் நிற சுடிதாரில்.இன்னொரு டிக்கெட் என்கிறேன்.நீ வந்து என்னருகில் அமர்கிறாய் சிரித்தப்படியே.விழாவிற்கு தாமதமாக வந்து என் அப்பா வெளியே காத்திருக்கிறார்.நான் அவர் முன்னே இருக்கிறேன்.திடுக்கிட்டு புரள்கிறேன் தூக்கம் கலைந்து.மணி பார்க்கிறேன் காலை பத்து முப்பது.









Comments