கூடங்குளம் அணு உலை-அழிவின் விளிம்பில் மக்கள்


என்னுடைய பிளாக்கின் template design யை  மாத்தி மாத்தி என் கண்ணும் கையும் ஓய்ந்து போனது.சரி ஏதாவது ஒன்று இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.ஆனால் பாருங்கள் google blog ன் domain யை மாற்றி விட்டது (.com லிருந்து  .in க்கு).அதனால் என் பிளாக் ஓபன் ஆவதற்கே நீண்ட நேரம் ஆனது அதுமில்லாமல் ஓட்டு மதிப்பும் போய்விட்டது வேறு வழியில்லை என்று  இப்படிமாற்றிவிட்டேன்.நல்லாயிருக்கா என்று நீங்களே சொல்லுங்கள்.

சரி நம்ம விசயத்துக்கு வருவோம்,

கூடங்குளத்தில் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் என்று ஒரு இணையதளத்தில் பிளாஸ் நியூஸ் போட்டிருக்கிறது.அணு உலை ஆபத்தானது என்று சொல்வது பொய் பிரச்சாரம் என்று மத்திய நிபுணர் குழு தலைவரும்,அணு உலை பாதுகாப்பானதுன்னு நம்ம அணு விஞ்ஞானியாமே டாக்ருடரு அப்துல் கலாம் வரைக்கும் சொல்லாரங்க .கூடங்குளம் மக்களும்,சுற்றுசூழல் அமைப்பினரும் ,அறிவுஜீவிகளும்,எழுத்தாள பெருமக்களும் இதனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.எல்லோருக்கும் மின்சாரம் வேண்டும்தான் ஆனால் இந்த அணு உலை விசயத்தில் வளர்ந்த நாடுகள் கூட ஒதுக்கி வேண்டாம் என்று சொல்வதின் காரணம் அதன் பயன்பாட்டை விட அழிவுதான் அதிகம் என்பதினால்தான்  .

Facebook கில் நண்பர் அருள் எழிலன் வெளியிட்டுள்ள  அறிவிப்பை இங்கு பதிப்பிக்கிறேன்


ஆதரியுங்கள் நண்பர்களே!


கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. ஊடக வெளிச்சம் படாத அந்த கருப்பு வெள்ளை காலத்தில் அச்சு ஊடகங்கள் அந்த மக்களின் போராட்டங்களை ஏராளமாக பதிவு செய்தன. நீண்ட கால இந்த போராட்டம் இன்று விவசாயிகள், மீனவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்த மாபெரும் பெருந்திரள் போராட்டமாக வெடித்துள்ளது. போராட்டம் துவங்கிய சில நாட்கள் ஊடகங்கள் மக்கள் உணர்வை பிரதிபலித்த நிலையில் இன்று பெருவாரியான காட்சி ஊடகங்கள் அணு உலையை ஆதரிக்கும் விளம்பரங்களை வெளியிட்டு லாபமடைந்து வருகிற நிலையில் அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. ஒரு பக்கம் மத்திய உள்துறையும் உளவுத்துறையும் போராட்டத்தை திசை திருப்பி அடக்கி ஒடுக்கும் முயர்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. மதவாத சக்திகளோ போராடும் மக்களை இந்துக்கள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் பிரித்து துண்டாடும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. நாம் வாழும் சமூகத்தில் சமகாலத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு சாட்சியாய் எழுந்து நிற்கும் கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஜனநாயகத்தை நேசிக்கும் அதிக பட்ச ஜனநாயக உரிமை கோரும் நம்மைப் போன்றோர் ஆதரிக்க வேண்டும். போராடும் மக்களை ஆதரித்து நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு வாருங்கள் உங்கள் ஆதரவினைத் தாருங்கள். அத்தோடு கூட்டம் பற்றிய இந்த அறிவிப்பை உங்களது முக நூலில் பதிந்து உதவுங்கள்.








விழாவிற்கு நான் போகிறேன்..


அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
விழாவிற்கு போய் வந்தவுடன் மீதியை பதிப்பிக்கிறேன்

அன்புடன்
அறிவழகன்

Comments