என் எண்ணங்களை போலவே
எப்பொழுதும் பொருட்கள்
சிதறிக் கிடக்கும்
இந்த அறையை
நான் நேசிக்கிறேன்
பழம் கதைகளில் வரும்
மாயஜால குகைகளில்
பொக்கிஷத்தை
காத்து கிடக்கும்
பூதங்களைப் போல
என் அந்தரங்கங்களை
காத்து கிடக்கும்
இந்த அறையை நேசிக்கிறேன்
அதைவிடவும்
புத்தனுக்கு போதியைப் போலவும்
பித்தனுக்கு தாதியைப் போலவுமிருக்கும்
என் அறையை எப்படி
எப்படி நேசிக்காமலிருப்பது
Comments
மயில்வண்ணன்