கொலுசு


யாரோயொரு
பெண்ணொருத்தியின்
கழண்டு விழுந்த 
கால்கொலுசொன்றை
கண்டெடுத்தேன் 
புழுதிமண் மூடியதிலிருந்து




மீந்துப் போன
மற்றொன்றை நீ
கழற்றி வைத்திருக்கலாம்


என் வீட்டு பெட்டக அறையில்
நீ தொலைத்த கொலுசு
உன்னை தொலைத்ததை
சொல்லிச்சொல்லி
மௌனத்தில்
மரணித்துக் கொண்டிருக்கிறது
என்னைப் போலவே




Comments