Tuesday, May 10, 2011

பேருந்தும் சில இருக்கைகளும்...

சில்லறைக் கேட்ட
நடத்துனர் குரலுக்காய்
பையில் துலவும் நேரம்
அழுக்கேறிய பிச்சைக்கார


கிழவியின் கையேந்தலில்
இடம் மாறியது அய்ந்து ரூபாய்.





இருக்கைகள் மாறி மாறி
கை நீட்டியதில்
ஒன்றிரண்டு விழுந்திருக்கலாம்
நடத்துனரின் அதட்டலில்
வெளியேறியது முதுமை.


பூக்கட்டிக் கொண்டிருந்த
ஒருவரின் கைக்குழந்தை
போவோரையும் வருபவர்களையும்
பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.




காதில் மாட்டிய இசையோடு
வாழ்க்கை ஓடுகிறது
குளிரூட்டிய பேருந்தில்
அவரவர் இருக்கையில்.





No comments: