Tuesday, January 31, 2012

கூடங்குளம் அணு உலை-அழிவின் விளிம்பில் மக்கள்


என்னுடைய பிளாக்கின் template design யை  மாத்தி மாத்தி என் கண்ணும் கையும் ஓய்ந்து போனது.சரி ஏதாவது ஒன்று இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.ஆனால் பாருங்கள் google blog ன் domain யை மாற்றி விட்டது (.com லிருந்து  .in க்கு).அதனால் என் பிளாக் ஓபன் ஆவதற்கே நீண்ட நேரம் ஆனது அதுமில்லாமல் ஓட்டு மதிப்பும் போய்விட்டது வேறு வழியில்லை என்று  இப்படிமாற்றிவிட்டேன்.நல்லாயிருக்கா என்று நீங்களே சொல்லுங்கள்.

சரி நம்ம விசயத்துக்கு வருவோம்,

கூடங்குளத்தில் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் என்று ஒரு இணையதளத்தில் பிளாஸ் நியூஸ் போட்டிருக்கிறது.அணு உலை ஆபத்தானது என்று சொல்வது பொய் பிரச்சாரம் என்று மத்திய நிபுணர் குழு தலைவரும்,அணு உலை பாதுகாப்பானதுன்னு நம்ம அணு விஞ்ஞானியாமே டாக்ருடரு அப்துல் கலாம் வரைக்கும் சொல்லாரங்க .கூடங்குளம் மக்களும்,சுற்றுசூழல் அமைப்பினரும் ,அறிவுஜீவிகளும்,எழுத்தாள பெருமக்களும் இதனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.எல்லோருக்கும் மின்சாரம் வேண்டும்தான் ஆனால் இந்த அணு உலை விசயத்தில் வளர்ந்த நாடுகள் கூட ஒதுக்கி வேண்டாம் என்று சொல்வதின் காரணம் அதன் பயன்பாட்டை விட அழிவுதான் அதிகம் என்பதினால்தான்  .

Facebook கில் நண்பர் அருள் எழிலன் வெளியிட்டுள்ள  அறிவிப்பை இங்கு பதிப்பிக்கிறேன்


ஆதரியுங்கள் நண்பர்களே!


கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. ஊடக வெளிச்சம் படாத அந்த கருப்பு வெள்ளை காலத்தில் அச்சு ஊடகங்கள் அந்த மக்களின் போராட்டங்களை ஏராளமாக பதிவு செய்தன. நீண்ட கால இந்த போராட்டம் இன்று விவசாயிகள், மீனவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்த மாபெரும் பெருந்திரள் போராட்டமாக வெடித்துள்ளது. போராட்டம் துவங்கிய சில நாட்கள் ஊடகங்கள் மக்கள் உணர்வை பிரதிபலித்த நிலையில் இன்று பெருவாரியான காட்சி ஊடகங்கள் அணு உலையை ஆதரிக்கும் விளம்பரங்களை வெளியிட்டு லாபமடைந்து வருகிற நிலையில் அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. ஒரு பக்கம் மத்திய உள்துறையும் உளவுத்துறையும் போராட்டத்தை திசை திருப்பி அடக்கி ஒடுக்கும் முயர்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. மதவாத சக்திகளோ போராடும் மக்களை இந்துக்கள் என்றும் கிறிஸ்தவர்கள் என்றும் பிரித்து துண்டாடும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. நாம் வாழும் சமூகத்தில் சமகாலத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு சாட்சியாய் எழுந்து நிற்கும் கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஜனநாயகத்தை நேசிக்கும் அதிக பட்ச ஜனநாயக உரிமை கோரும் நம்மைப் போன்றோர் ஆதரிக்க வேண்டும். போராடும் மக்களை ஆதரித்து நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு வாருங்கள் உங்கள் ஆதரவினைத் தாருங்கள். அத்தோடு கூட்டம் பற்றிய இந்த அறிவிப்பை உங்களது முக நூலில் பதிந்து உதவுங்கள்.








விழாவிற்கு நான் போகிறேன்..


அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
விழாவிற்கு போய் வந்தவுடன் மீதியை பதிப்பிக்கிறேன்

அன்புடன்
அறிவழகன்

Monday, January 30, 2012

அடச்சே..!!!??? (அல்லது)கனவில் ஒருநாள்










என் நண்பனின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகத் தயாராகிறேன்.நீண்ட காத்திருப்பிற்குப்பின் பேருந்து வருகிறது.பேருந்தில் ஏறி இருக்கைக்கு வருகிறேன்.கண்டக்டர் வருகிறார் சீட்டைக் கிழித்து கொடுக்கிறார்.நான் மணிபர்சிலிருந்து நூறு ரூபாயை நீட்டுகிறேன்.இப்போது என் கவனமெல்லாம்

Saturday, January 28, 2012



டிசம்பர் மாதக் குளிரில் தெப்பலாக நனைந்து மருத்துவமனையின் கட்டிடம் நின்றுக் கொண்டிருந்தது.மருத்துவனை முற்றத்தில் இரண்டு பெரிய தூண்கள் வெள்ளையடிக்கப் பட்டிருந்தது.அது பார்ப்பதற்கு ஒரு பெரிய ராட்சசன் முட்டித் தெரிய தன் வேட்டியைத் தூக்கி கட்டிக்கொண்டு   நிற்பது போலிருந்தது.கிழக்கில் கதிரவன் தன் முகம் முழுக்க இளமஞ்ச சிவப்பை பூசிக் கொண்டு வந்தான்.நேரம் போக போக இளஞ்சிவப்பிலிருந்து வெள்ளி நிறத்துக்கு தன்னைமாற்றிக் கொண்டான்.


காலை 6 மணி,


வழக்கத்துக்கு மாறாக விழிப்பு வந்துவிட்டது.படுக்கையிலிருந்து எழுந்து மணி பார்த்தேன் 5.45 .நானிருப்பது மருத்துவமனையின்  முதல் தளத்திலுள்ள அறை எண் 105-ல்.டீக் குடித்துவிட்டு வரலாமென கேண்டீன் போய்ப் பார்த்தேன் .பால் இன்னும் வரல கொஞ்சம் நேரமாகும் என்றார்கள்.சரியென அப்படியே மருத்துவமனைக்கு முன்னாலிருந்த டீக்கடை வந்து ஒரு டீயைக் குடித்துவிட்டு செக்கூரிட்டி அலுவலகத்தில் பேப்பர் படித்துக் கொண்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ரெண்டு பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையைச்சுற்றி கூட்டிக் கொண்டிருந்தனர்.மூவர் உள்ளே சுத்தம் செய்து துடைத்துக் கொண்டிருந்தனர்.எமர்சன்ஷி வார்டில் நோயாளிகள் இருமிக் கொண்டும் 

Wednesday, January 25, 2012

கோடிட்ட இடங்களை நிரப்புதல்-புத்தகத்தைப் பற்றி சில குறிப்புகள்







"அப்பாவோடதான் வாழ ஆசை" எனப் பெரியமனுசி போல் 
சொல்லும் எங்கள் சின்ன மகள் "புப்பு" என்கிற 
ஸ்ரீசங்கரகோமதிக்கு... 




என்றுதான் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகத்தின் பக்கங்கள். ஒவ்வொரு பக்கங்களை புரட்டும் போதும் நமக்குள் கிடக்கும் பால்யம் தன்னைப்புரட்டிப் பார்த்துக்கொள்கிறது.உலகத்தின் ஓட்டத்தோடு என்னைப் பொருத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தவனை எதுவோயொன்று தடுத்து நிறுத்தியதைப் போல இருக்கிறது இந்தத் தொகுப்பிலுள்ள கவிவரிகள்.படிக்க படிக்க என் பால்யத்தை கண்முன் நிறுத்தி ஒப்பனை செய்துப் பார்க்கிறது என் மனம்.இழந்தயொன்று இன்று கைக்குள் சிக்கியதாய் கொண்டாட்டம் கொள்கிறது என் பால்யம்.


                                     _______________________________

குழந்தைகள் உலகம் போலி ஒப்பனையில்லாதது.அதனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் நிறையவே விசயங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்த கவிதைகளே போதுமானது,



 கசடற


தன் பிரிய உலகத்தில்
கடந்து போகும்
பூனை,நாய்,மாடு,ஆடு,கோழி
அனைத்தையும் குட்டி குட்டா
என்று அழைப்பதோடு
வீட்டில்
அம்மா குட்டி,அப்பா குட்டா
எனவும் சமயத்தில்
அழைக்கிறாள்.


குட்டி என்றால் பெண்பாலையும்
குட்டா என்றால் ஆண்பாலையும்
குறிப்பதென்று
யாரிடம் எப்பொழுது கற்றாள்
என்று தெரியவில்லை.


ஆனால் 
பிரியத்திற்கு
உயர்திணை,அஃறிணை
பாகுபாடு இல்லை
எனக் கற்றுக் கொடுக்கிறாள்
தமிழ் ஆசிரியை ஆன எனக்கு.






               தொலைத்த தேடல்


இருவருடங்களுக்கு முன்னம்
கோடை விடுமுறையில்
ஊருக்கு வந்திருந்த
அத்தைப் பையன் "ஸ்ரீஜித்"துடன்
வ.உ.சி மைதானத்தில் குதிரைச் சவாரி 
போனபோது தொலைத்த சிவப்புச் செருப்பை,
நேற்றைக்குப் போன போதும்
தேடச் சொல்லி அழுகிறாள் "புப்பு"


  

கடைசியாக ஒன்றே ஒன்று, தொலைத்த தேடல் என்ற கவிதையில் முன்னர்  தொலைத்ததை தேடச்சொல்லி அழுவதைப் பார்க்கையில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் "புப்பும்" முன்னர் தொலைத்த எதையாவது தேடச்சொல்லி அழுதால்தான் என்ன என்று நினைக்கவைக்கிறது.





பின்குறிப்பு: அன்புள்ள சுமதி ராம் அவர்களே, அச்சு அசலான குழந்தைகள் உலகத்தை படம்பிடித்ததில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள். தொடருங்கள்... 


அன்புடன்
அறிவழகன்


புத்தகம் கிடைக்குமிடம்  :


கோடிட்ட இடங்களை நிரப்புதல்
சுமதி ராம்
வெளியீடு: வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்
திருவண்ணாமலை
பேசி: 9444867023
விலை ரூ.50/-





Wednesday, January 4, 2012

பகல் உறக்கம்:




உறங்க செல்லபோகும் நேரம்
இரவு பன்னிரண்டு மணி
படுக்கையில் சாய்ந்து
இரவை கண்மூடி
கனவை திறக்கிறேன்
பகலாய்



என் பகல்பொழுது
வெண்ணிலவையும்
நட்சத்திரங்களையும் கொண்டது



Monday, January 2, 2012

எல்லோருக்குமாக ஒரு சொல்



ஒரு கண்ணாடியைப் போலதான் என்வாழ்க்கை.நடப்பவை எதற்கும்  காரணகாரியங்கள் எதுவும் என் கைகளில் இல்லை.என் முன்னே சிலநேரம் தேவதைகளும் தன்முகம் காட்டி போகிறது.சிலநேரம் கொடிய பேய்களும் தன் அகோரபற்கள் வெளித்தெரிய என்னிடம் வருகிறார்கள்.எதையும் நான் வெறுப்பதில்லை.

ஒரு குடிகாரனைப் பார்ப்பதுபோல எல்லோரும் என்னை முகம்சுளிக்கிறார்கள்.என் இயல்புகளிலிருந்து என்னால் வெளியேறி வரமுடிவதில்லை.இந்த சமூகம் என்னை ஒரு கருங்கல்லை போல கெட்டிப்படுத்தி வைக்கவே ஆசைபடுகிறது.ஒரு பறவையின் சிறகாய் வாழத்துடிக்கும் என்மனவெளியை சூறாவளி சொற்கள் கொண்டு அலைகழிக்க ஆசைபடுவதேன்.

கடேசிகடைசியாய் எல்லோருக்குமாக ஒரு சொல்

உங்கள் பாவங்களை சுமக்கும்
ஒரு தேவதை என்னிடம் இருக்கிறாள்
உங்கள் வேதனை மிகுந்த காயங்கள் ஆற்ற
ஒரு அற்புதம் என்னிடம் இருக்கிறது

அது அன்பு
அன்பு மட்டுமே
அன்பைத் தவிர வேறோன்றுமில்லை.